பால் மற்றும் பன்னீரில் கலப்படம் செய்தால் கடும் நடவடிக்கை நாடு தழுவிய சோதனையில் இறங்குகிறது FSSAI
December 17, 2025

பால், பன்னீர் மற்றும் கோவாவில் அதிகரித்து வரும் கலப்படத்தைத் தடுக்க இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) நாடு தழுவிய அதிரடி சோதனையைத் தொடங்கியுள்ளது. உரிமம் இன்றி செயல்படும் நிறுவனங்கள் மற்றும் தரமற்ற தயாரிப்புகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து மாநிலங்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த சிறப்புப் பிரச்சாரத்தின் கீழ் உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் மாதிரிகளைச் சேகரித்து தரம் குறித்து ஆய்வு செய்வர். விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமம் ரத்து செய்யப்பட்டு ஆலைகள் சீல் வைக்கப்படும். நுகர்வோர் நலனைப் பாதுகாக்க இந்தச் சோதனைகள் அனைத்தும் மின்னணு போர்டல் மூலம் நேரடியாகக் கண்காணிக்கப்படும்.