பாலியல் மாத்திரை விபரீதம், காதலன் சடலத்தை மருத்துவமனையில் விட்டுவிட்டு காதலி தப்பியோட்டம்

உத்தரப்பிரதேசத்தில் காதலியைச் சந்திக்கச் சென்ற இளைஞர், பாலியல் உணர்வைத் தூண்டும் மாத்திரைகளை அளவுக்கு அதிகமாக உட்கொண்டதால் பரிதாபமாக உயிரிழந்தார். பாக்பத் பகுதியைச் சேர்ந்த வினோத் குமார் (34), காதலியுடன் ஹோட்டலில் தங்கியிருந்தபோது இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார். திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்ட அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற அந்தப் பெண், வினோத் உயிரிழந்ததை அறிந்ததும் சடலத்தை அங்கேயே விட்டுவிட்டுத் தப்பியோடிவிட்டார்.
மருத்துவரின் ஆலோசனையின்றி எடுத்துக்கொண்ட மாத்திரைகளின் ‘ஓவர் டோஸ்’ காரணமாக அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாம் எனப் போலீசார் சந்தேகிக்கின்றனர். வினோத்தின் குடும்பத்தினருக்குத் தகவல் அளித்த அந்த மர்மப் பெண் யார் என்பது குறித்துப் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது தலைமறைவாக உள்ள அந்தப் பெண்ணைப் பிடிக்க அந்தப் பகுதியிலுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வருவதாகக் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.