பாலியல் புகார் விசாரணையில் அதிருப்தி: பிசிபி மீது ஜஹானாரா ஆலம் காட்டம்
February 9, 2026

வங்கதேச மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னாள் மேலாளர் மன்சுருல் இஸ்லாம் மீது முன்னாள் கேப்டன் ஜஹானாரா ஆலம் பாலியல் துன்புறுத்தல் புகாரை அளித்தார். இந்த விவகாரத்தில் வங்கதேச கிரிக்கெட் வாரியம் (பிசிபி) அமைத்த மூன்று பேர் கொண்ட விசாரணைக் குழுவின் செயல்பாடுகள் மற்றும் அதன் முதற்கட்ட அறிக்கை தனக்கு திருப்தி அளிக்கவில்லை என ஜஹானாரா பகிரங்கமாகத் தெரிவித்துள்ளார்.
விசாரணை முறையான திசையில் செல்லவில்லை என அதிருப்தி வெளியிட்டுள்ள அவர், நீதிக்காகக் காத்திருப்பதாகக் கூறியுள்ளார். நாட்டின் முன்னணி வீராங்கனை ஒருவரின் இந்த குற்றச்சாட்டு மற்றும் விசாரணை அறிக்கை மீதான அவரது எதிர்ப்பு அந்நாட்டு கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.