பாமக சின்னம் மற்றும் அங்கீகாரம் தொடர்பான சட்டப் போராட்டத்தில் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையே மோதல் தீவிரம்

பாமக சின்னம் மற்றும் அங்கீகாரம் தொடர்பான சட்டப் போராட்டத்தில் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையே மோதல் தீவிரம்

பாமக நிறுவனர் ராமதாஸ் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் அன்புமணியின் முறையற்ற செயல்பாடுகளே கட்சியின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட முக்கிய காரணம் என குற்றம்சாட்டியுள்ளார். கட்சியின் சட்ட விதிகளுக்கு மாறாக அன்புமணி செயல்பட்டதாகவும் தலைவர் பதவி குறித்து தவறான அறிவிப்புகளை வெளியிட்டதாகவும் அவர் தனது 18 பக்க பதில் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு பதிலளித்த அன்புமணி தரப்பு ராமதாஸுக்கு தற்போது 87 வயதாகிவிட்டதால் நிர்வாக முடிவுகளை எடுக்கும் தகுதி அவருக்கு இல்லை என வாதிட்டது. அவர் வெறும் ஆலோசகராக மட்டுமே செயல்பட முடியும் என்றும் கட்சி விவகாரங்களில் தலையிட உரிமை இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம் வழக்கை மார்ச் 13 ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *