பாஜகவின் மெகா ஆஃபரை நிராகரித்து பி டீம் முத்திரையை உடைப்பாரா விஜய்
March 14, 2026

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. நடிகர் விஜய்யின் தவெக கட்சியை தங்கள் கூட்டணிக்குள் கொண்டு வர ‘ஆட்சியில் பங்கு’ என்ற பெரிய சலுகையை பாஜக மேலிடம் முன்வைத்துள்ளதாகத் தெரிகிறது. இருப்பினும், விஜய்யின் அரசியல் ஆலோசகர் ஜான் ஆரோக்கியசாமி இந்த கூட்டணிக்கு முட்டுக்கட்டை போட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பாஜகவுடன் இணைந்தால் ‘பி டீம்’ என்ற விமர்சனம் உண்மையாகிவிடும் என்றும், அது கட்சியின் எதிர்கால வளர்ச்சியைப் பாதிக்கும் என்றும் ஜான் எச்சரித்துள்ளார். தவெகவின் தனித்துவத்தைத் தக்கவைக்க அவர் தனித்துப் போட்டியிடவே பரிந்துரைக்கிறார். இந்த இக்கட்டான சூழலில் விஜய் எடுக்கப்போகும் முடிவு தமிழக தேர்தல் களத்தின் திசையை மாற்றியமைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.