பாகிஸ்தான் மருந்துகள் உயிருக்கு ஆபத்து ஆப்கானிஸ்தானை காக்க முன்வரும் இந்தியா
December 17, 2025

பாகிஸ்தான் அனுப்பி வைத்த தரம் குறைந்த மற்றும் காலாவதியான மருந்துகளால் ஆப்கானிஸ்தானின் சுகாதாரத் துறை கடும் பாதிப்படைந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த ஆப்கான் அரசு, பாகிஸ்தானுடனான வர்த்தகத்தை முறித்துக் கொண்டு இந்தியாவின் உதவியை நாடியுள்ளது. இதன் ஒரு பகுதியாக ஆப்கான் சுகாதார அமைச்சர் மௌலவி நூர் ஜலால் ஜலாலி தற்போது முக்கிய பேச்சுவார்த்தைக்காக டெல்லி வந்துள்ளார்.
ஏற்கனவே கல்வி மற்றும் உள்கட்டமைப்பு துறைகளில் இந்தியா வழங்கி வரும் மனிதாபிமான உதவிகளை ஆப்கானிஸ்தான் பாராட்டியுள்ளது. இப்போது சுகாதாரத் துறையிலும் இந்தியாவின் உயர்தர மருந்துகள் மற்றும் மருத்துவ சேவைகளைப் பெற ஆப்கான் ஆர்வம் காட்டுகிறது. இந்த நடவடிக்கை பாகிஸ்தானுக்கு பெரும் பின்னடைவாகவும், இந்தியா-ஆப்கானிஸ்தான் இடையிலான உறவில் புதிய மைல்கல்லாகவும் பார்க்கப்படுகிறது.