பாகிஸ்தானை தொடர்ந்து வங்கதேசமும் கடன் வலையில் சிக்குகிறதா? 5 ஆண்டுகளில் 42% அதிகரித்த வெளிநாட்டு கடன்!

இந்தியாவின் அண்டை நாடான வங்கதேசம், பாகிஸ்தானைப் போலவே தற்போது கடுமையான கடன் வலையில் சிக்கித் தவிக்கிறது என உலக வங்கியின் ‘சர்வதேச கடன் அறிக்கை 2025’ மூலம் தெரியவந்துள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில் (2020 முதல் 2024 இறுதி வரை) வங்கதேசத்தின் மொத்த வெளிநாட்டுக் கடன் 42% அதிகரித்து 104.48 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது, இது பெரும் கவலையை அளிக்கிறது. தேசிய வருவாய் வாரியத்தின் தலைவர் முகமது அப்துர் ரஹ்மான் கானின் கூற்றுப்படி, வங்கதேசம் ஏற்கனவே ஒருவித கடன் வலையில் நுழைந்துவிட்டது.
தற்போதுள்ள மொத்த வெளிநாட்டுக் கடன் அதன் ஏற்றுமதி வருவாயில் 192% என்ற அளவில் உள்ளது. இந்த நிலையில், கடனை திருப்பிச் செலுத்தும் அழுத்தம் வேகமாக அதிகரிக்கும் நாடுகளின் பட்டியலில் வங்கதேசத்தை உலக வங்கி சேர்த்துள்ளது. பலதரப்பட்ட நிறுவனங்கள் மற்றும் இருதரப்பு நாடுகளிடம் இருந்து வாங்கப்பட்ட கடன் சுமை, அந்நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு புதிய சவால்களை ஏற்படுத்தி வருகிறது.