‘பாகம் பாக் 2’ படத்திலிருந்து கோவிந்தா நீக்கம்! அக்ஷயுடன் இணையும் புதிய நடிகர் யார்?
February 6, 2026

அக்ஷய் குமாரின் சூப்பர் ஹிட் நகைச்சுவைத் திரைப்படமான ‘பாகம் பாக்’ படத்தின் இரண்டாம் பாகம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. முதல் பாகத்தில் அக்ஷய் மற்றும் கோவிந்தாவின் கூட்டணி ரசிக்கப்பட்ட நிலையில், தற்போது கோவிந்தாவிற்கு பதிலாக மனோஜ் பாஜ்பாய் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ராஜ் ஷாண்டில்யா இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் அக்ஷய் குமார் மற்றும் பரேஷ் ராவல் மீண்டும் இணைகின்றனர். மீனாட்சி சௌத்ரி கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள நிலையில், படப்பிடிப்பு மார்ச் மாதம் மும்பையில் தொடங்கவுள்ளது. கோவிந்தாவின் இடத்தை மனோஜ் பாஜ்பாய் நிரப்புவாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது.