பரங்கிமலை வரை நீட்டிக்கப்பட்ட பறக்கும் ரயில் சேவை ஆனால் ஆதம்பாக்கம் பயணிகளுக்கு ஏமாற்றமே
March 14, 2026

சென்னை கடற்கரை முதல் வேளச்சேரி வரை இயக்கப்பட்ட பறக்கும் ரயில் சேவை இன்று முதல் பரங்கிமலை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள புதிய கால அட்டவணையின்படி 43 ஜோடி மின்சார ரயில்கள் இந்த வழித்தடத்தில் இயக்கப்படும். மேலும் பயணிகளின் நெரிசலைக் குறைக்க வேளச்சேரி மற்றும் பரங்கிமலை இடையே சிறப்பு ஷட்டில் ரயில் சேவைகளும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த புதிய வழித்தடத்தில் புழுதிவாக்கம் மற்றும் ஆதம்பாக்கம் ரயில் நிலையங்கள் இணைக்கப்பட்டிருந்தாலும் செயல்பாட்டுக் காரணங்களால் ஆதம்பாக்கத்தில் ரயில்கள் நிற்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் நங்கநல்லூர் மற்றும் பழவந்தாங்கல் பகுதி மக்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். ஆதம்பாக்கம் நிலையத்தில் பணிகளை விரைந்து முடித்து ரயில்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் உறுதி அளித்துள்ளது.