பனியில் வழியும் இரத்தம்! அண்டார்டிகாவின் மர்மம் உலகின் அழிவுக்கான அறிகுறியா?

அண்டார்டிகாவின் டெய்லர் பனிப்பாறையில் (Taylor Glacier) இருந்து ரத்தம் போன்ற சிவப்பு நிற நீர் அருவியாகக் கொட்டும் ‘பிளட் ஃபால்ஸ்’ (Blood Falls) தற்போது உலகையே அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
பல ஆண்டுகளாக ஆக்சிஜன் இல்லாத நிலையில், இரும்புச்சத்து நிறைந்த உப்பு நீர் பனிக்கட்டிக்கு அடியில் தேங்கியிருந்தது. தற்போது அது காற்றின் தொடர்புக்கு வரும்போது வேதிவினை ஏற்பட்டு ரத்த சிவப்பாக மாறுகிறது என விஞ்ஞானிகள் விளக்குகின்றனர். மைனஸ் 19 டிகிரி வெப்பநிலையிலும் இந்த நீர் உறைந்து போகாமல் ஓடிக்கொண்டிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இருப்பினும், இது ஒரு இயற்கை அதிசயம் மட்டுமல்ல, புவி வெப்பமடைதலின் தீவிர எச்சரிக்கையாகவும் பார்க்கப்படுகிறது. பனிப்பாறைகள் உருகுவதால், உள்ளே ஒளிந்திருக்கும் இது போன்ற பழங்கால ரசாயனங்கள் கடலில் கலந்தால், கடல்வாழ் உயிரினங்களின் சமநிலை பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. இது பூமியின் சுற்றுச்சூழல் வேகமாக மாறி வருவதற்கான ஒரு அபாய சிக்னலாகவே கருதப்படுகிறது.