பதவி விலகிய ஆனந்த போஸ் விடுத்த மர்மமான விளக்கம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு

பதவி விலகிய ஆனந்த போஸ் விடுத்த மர்மமான விளக்கம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு

மேற்கு வங்க ஆளுநர் பதவியை சி.வி. ஆனந்த போஸ் திடீரென ராஜினாமா செய்தது அம்மாநில அரசியலில் விவாதப் பொருளாகியுள்ளது. இதுகுறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், தனது ரத்த அழுத்தம் சீராக இருப்பதாகக் கூறி அரசியல் அழுத்தங்கள் குறித்த யூகங்களுக்கு மர்மமான முறையில் முற்றுப்புள்ளி வைத்தார். ஒரு சாதாரண குடிமகனாக மக்களுடன் இருக்கவே தாம் விரும்புவதாக அவர் விளக்கம் அளித்தார்.

பதவி விலகிய பின் ஆளுநர் மாளிகைக்கு செல்லாதது குறித்து எழுந்த விமர்சனங்களை அவர் மறுத்துள்ளார். மாநிலத்தை விட்டு வெளியேறும் முன் முதல்வர் மம்தா பானர்ஜியை நேரில் சந்தித்து பிரியாவிடை பெற உள்ளதாக அவர் தெரிவித்தார். கேரளாவுக்கு அடுத்தபடியாக வங்காளமே தனது இரண்டாவது வீடு என்றும், இங்குள்ள மக்களுடன் தமக்கு ஆழமான பிணைப்பு இருப்பதாகவும் அவர் உருக்கமாகக் கூறினார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *