பட்ஜெட் எதிரொலி இந்த பொருட்களின் விலை அதிரடியாக உயர்வு
February 1, 2026

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு இந்த ஆண்டு பொது பட்ஜெட்டில் ‘தற்சார்பு இந்தியா’ திட்டத்தை வலுப்படுத்தும் நோக்கில் பல்வேறு பொருட்களுக்கான இறக்குமதி வரி விகிதங்களை உயர்த்தியுள்ளது. இதன் விளைவாக, சந்தையில் குறிப்பிட்ட சில பொருட்களின் விலைகள் கணிசமாக உயரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக சிகரெட், புகையிலை பொருட்கள் மற்றும் மதுபானங்களின் விலை அதிகரிக்க உள்ளது. அத்துடன் சில குறிப்பிட்ட தாதுக்களின் மீதான இறக்குமதி வரியும் உயர்த்தப்பட்டுள்ளது. உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கவும் இறக்குமதியைக் குறைக்கவும் அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதால், இந்த பொருட்கள் இனி கூடுதல் விலைக்கு விற்கப்படும்.