பஜ்ரங் தளம் மிரட்டலால் வாழ்வாதாரம் இழந்த முகமது தீபக்கிற்கு உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் கரம் கொடுக்கின்றனர்

பஜ்ரங் தளம் மிரட்டலால் வாழ்வாதாரம் இழந்த முகமது தீபக்கிற்கு உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் கரம் கொடுக்கின்றனர்

உத்தராகண்டில் ஒரு முஸ்லிம் வியாபாரியைப் பாதுகாக்க துணிச்சலுடன் நின்ற ‘ஹல்க் ஜிம்’ உரிமையாளர் தீபக் குமார், இந்துத்துவ அமைப்புகளின் மிரட்டலால் கடும் நிதி நெருக்கடியைச் சந்தித்தார். 150 ஆக இருந்த ஜிம் உறுப்பினர்களின் எண்ணிக்கை 15 ஆகக் குறைந்ததால் வாடகை செலுத்த முடியாமல் அவர் தவித்தார். இருப்பினும், கொள்கை பிடிப்புக் கொண்ட தீபக் நேரடியாகப் பண உதவி பெற மறுத்துவிட்டார்.

இதனைத் தொடர்ந்து, உச்ச நீதிமன்றத்தைச் சேர்ந்த 20 மூத்த வழக்கறிஞர்கள் தீபக்கிற்கு உதவ முன்வந்துள்ளனர். அவர்கள் தலா 10,000 ரூபாய் செலுத்தி ஜிம் உறுப்பினர்களாக இணைந்துள்ளனர். இந்தத் தொகையை ஏழை மாணவர்களின் பயிற்சிக் கட்டணமாக அவர்கள் செலுத்துவதன் மூலம் தீபக்கிற்கு வருமானம் கிடைப்பதை உறுதி செய்துள்ளனர். ராகுல் காந்தி மற்றும் எம்.பி ஜான் பிரிட்டாஸ் ஆகியோர் ஏற்கனவே தீபக்கின் வீரத்தைப் பாராட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *