நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரையில் அதிகமுறை உச்சரித்த அந்த ஒரு வார்த்தை
February 2, 2026

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனின் பட்ஜெட் உரையில் ‘வரி’ (Tax) என்ற வார்த்தை அதிகபட்சமாக 140 முறை பயன்படுத்தப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து ‘முன்மொழியப்பட்டது’ (Proposed) 103 முறையும், ‘வருமானம்’ 99 முறையும், ‘முன்மொழிவு’ 97 முறையும் இடம்பெற்றுள்ளன. மேலும் ‘பிரிவு’ (Section) 82 முறையும், ‘சட்டம்’ 69 முறையும் அவரது உரையில் முக்கியத்துவம் பெற்றுள்ளன.
இந்த புள்ளிவிவரங்களின்படி, ‘சுங்கம்’ 51 முறையும், ‘சுங்கவரி மற்றும் பொருட்கள்’ 47 முறையும் குறிப்பிடப்பட்டுள்ளன. ‘பாரதம்’ 49 முறையும், ‘சேவை’ 42 முறையும் பயன்படுத்தப்பட்டுள்ளன. வரி விகிதம், தள்ளுபடி, அபராதம் மற்றும் விலக்கு போன்ற வார்த்தைகளின் தொடர்ச்சியான பயன்பாடு இந்த பட்ஜெட்டின் முக்கிய நோக்கங்களை பிரதிபலிக்கிறது.