நிர்மலா சீதாராமனின் பட்ஜெட் அறிவிப்பு இன்று ஞாயிற்றுக்கிழமையும் களைகட்டும் பங்குச்சந்தை

நிர்மலா சீதாராமனின் பட்ஜெட் அறிவிப்பு இன்று ஞாயிற்றுக்கிழமையும் களைகட்டும் பங்குச்சந்தை

மத்திய பட்ஜெட் 2026 இன்று தாக்கல் செய்யப்படுவதை முன்னிட்டு, ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினமாக இருந்தபோதிலும் இந்திய பங்குச்சந்தைகள் இன்று வழக்கம்போல் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் 2026-27 நிதியாண்டிற்கான பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்கிறார். பட்ஜெட் அறிவிப்புகளுக்கு முதலீட்டாளர்கள் உடனுக்குடன் எதிர்வினையாற்றும் வகையில் இந்த சிறப்பு வர்த்தக அமர்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த முக்கிய நாளில், பெரும் நிறுவனங்கள் முதல் சிறு முதலீட்டாளர்கள் வரை அனைவரும் நிதியமைச்சரின் அறிவிப்புகளை ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர். பட்ஜெட் தாக்கத்தால் குறிப்பிட்ட சில துறைகளில் கணிசமான லாபம் கிடைக்க வாய்ப்புள்ளதாக சந்தை வல்லுநர்கள் கணித்துள்ளனர். காலை 9:15 மணி முதல் மாலை 3:30 மணி வரை வழக்கமான வர்த்தக நேரத்தைப் பின்பற்றி பங்குகளை வாங்கவும் விற்கவும் முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *