நிதீஷ் குமார் முன்னிலையில் அவமானம் ஹிஜாப் அணிந்த பெண் மருத்துவர் பீகாரை விட்டு வெளியேறினார்

நிதீஷ் குமார் முன்னிலையில் அவமானம் ஹிஜாப் அணிந்த பெண் மருத்துவர் பீகாரை விட்டு வெளியேறினார்

பீகார் முதல்வர் நிதிஷ் குமார் பங்கேற்ற நிகழ்ச்சியில் ஹிஜாப் அகற்றப்பட்ட சம்பவத்தால் மனமுடைந்த மருத்துவர் நுஸ்ரத் பர்வீன், அரசு வேலையைத் துறந்து மாநிலத்தை விட்டு வெளியேறியுள்ளார். டிசம்பர் 20-ஆம் தேதி பணியில் சேர வேண்டிய அவர், அவமானத்தால் பாட்னாவிலிருந்து கொல்கத்தாவிற்குத் தனது வீட்டிற்குத் திரும்பினார்.

சிறுவயதிலிருந்தே ஹிஜாப் அணிந்து கல்வி பயின்ற தனக்கு, இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதாக அவர் கூறியுள்ளார். நிகழ்ச்சியில் அங்கிருந்தவர்கள் சிரித்தது தனது சுயமரியாதையைப் பாதித்துள்ளதால், இனி அங்கு பணிபுரியத் தயாராக இல்லை என்று அவர் மிகுந்த வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *