நாமக்கல்லில் சட்டமன்ற உறுப்பினரின் சாதனை விளக்க பேனர் சரிந்து விழுந்ததில் பள்ளி மாணவிக்கு நேர்ந்த விபரீதம்

நாமக்கல்லில் சட்டமன்ற உறுப்பினரின் சாதனை விளக்க பேனர் சரிந்து விழுந்ததில் பள்ளி மாணவிக்கு நேர்ந்த விபரீதம்

நாமக்கல் மாவட்டம் காளிப்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே பலத்த சூறைக்காற்று வீசியதில் திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரனின் சாதனை விளக்க பேனர் திடீரென சரிந்து விழுந்தது. இதில் பள்ளி முடிந்து பேருந்துக்காக காத்திருந்த தாரணி என்ற பிளஸ் ஒன் மாணவி பலத்த காயமடைந்தார். அருகில் இருந்தவர்கள் மாணவியை மீட்டு உடனடியாக சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த எதிர்பாராத விபத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ள நிலையில் மல்லசமுத்திரம் காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காற்றின் வேகத்தால் பேனர் சரிந்து மாணவி காயமடைந்த சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அரசியல் விளம்பர பேனர்களால் ஏற்படும் பாதுகாப்பு குறைபாடுகள் குறித்து இப்பகுதியில் தற்போது விவாதம் எழுந்துள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *