நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தியின் பிடிவாதம் – கிரண் ரிஜிஜு கடும் தாக்குதல்

நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தியின் பிடிவாதம் – கிரண் ரிஜிஜு கடும் தாக்குதல்

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் ஆளுங்கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையிலான மோதல் வெடித்துள்ளது. காங்கிரஸ் எம்பிக்கள் சபாநாயகர் அறையில் அநாகரீகமாக நடந்துகொண்டதாகவும், சபையின் கண்ணியத்தை சீர்குலைப்பதாகவும் மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றம் சாட்டியுள்ளார். ராகுல் காந்தியின் பிடிவாதம் மற்றும் காங்கிரஸின் ரவுடித்தனம் காரணமாக முக்கியமான சட்டப்பணிகள் முடங்கியுள்ளதாக அவர் அதிருப்தி தெரிவித்தார்.

பிரதமரின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் எதிர்க்கட்சியினர் திட்டமிட்டதாக ரிஜிஜு எச்சரித்துள்ளார். நாடாளுமன்றம் ரவுடித்தனம் செய்வதற்கான இடமல்ல என்றும், விவாதம் இன்றி பட்ஜெட் நிறைவேற்றப்பட்டால் அதற்கு எதிர்க்கட்சிகளே பொறுப்பேற்க வேண்டும் என்றும் அவர் கூறினார். தற்போது இரு தரப்பினரிடையே ஏற்பட்டுள்ள இந்த கடும் மோதலால் நாடாளுமன்ற நடவடிக்கைகள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றன.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *