நஸ்ருல் சமாதி அருகே தீவிரவாத தலைவர் அடக்கம்! புரட்சிக் கவிஞரின் மரபுக்கு ஆபத்தா? குடும்பத்தினர் கொதிப்பு
December 21, 2025

டாக்கா பல்கலைக்கழகத்தில் தேசிய கவிஞர் காஜி நஸ்ருல் இஸ்லாமின் சமாதிக்கு அருகில் தீவிரவாத தலைவர் ஷெரீப் உஸ்மான் ஹாடி அடக்கம் செய்யப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கவிஞரின் குடும்பத்தினர் இந்த முடிவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன், கவிஞரின் சமாதியின் பாதுகாப்பு குறித்து கவலை வெளியிட்டுள்ளனர்.
மத நல்லிணக்கத்தின் அடையாளமான நஸ்ருல் அருகே தீவிரவாதக் கருத்துக்களைப் பரப்பியவரை அடக்கம் செய்தது உள்நோக்கம் கொண்டது என குடும்பத்தினர் குற்றம் சாட்டுகின்றனர். இந்த செயலால் எதிர்காலத்தில் கவிஞரின் நினைவிடம் அங்கிருந்து அகற்றப்படலாம் என அவர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.