தோனியை அணியில் இருந்து நீக்க யாருக்கு தைரியம் இருக்கிறது முன்னாள் வீரர் பத்ரிநாத் அதிரடி கேள்வி
March 14, 2026

ஐபிஎல் தொடர் தொடங்கவுள்ள நிலையில் தோனியின் இருப்பு குறித்து சிஎஸ்கே முன்னாள் வீரர் பத்ரிநாத் பரபரப்பான கருத்தை தெரிவித்துள்ளார். தோனியிடம் சென்று நீங்கள் இன்றைய போட்டியில் விளையாடப் போவதில்லை என்று சொல்லும் தைரியம் உலகில் எந்த ஒரு வீரருக்கும் கிடையாது என்று அவர் கூறியுள்ளார்.
பயிற்சியாளர் பிளெமிங்கால் கூட இத்தகைய முடிவை தோனியிடம் தெரிவிக்க முடியாது என்று பத்ரிநாத் குறிப்பிட்டுள்ளார். சிஎஸ்கே சிஇஓ காசி விஸ்வநாதன் தோனி அனைத்து போட்டிகளிலும் விளையாடுவார் என உறுதிப்படுத்தியுள்ள நிலையில், பத்ரிநாத்தின் இந்த கருத்து சமூக வலைதளங்களில் வைரலாகி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.