தோண்ட தோண்ட சடலங்கள் மற்றும் எத்தியோப்பியாவில் 125 பேர் மாயமான நிலையில் 3 நாட்கள் தேசிய துக்கம் அறிவிப்பு
March 14, 2026

எத்தியோப்பியாவின் காமோ மண்டலத்தில் பெய்த கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி பலி எண்ணிக்கை 80-ஆக உயர்ந்துள்ளது. காச்சோ பாபா மற்றும் போன்கே உள்ளிட்ட மாவட்டங்களில் கிராமங்களே மண்ணுக்குள் புதைந்தன. இதில் சுமார் 125 பேர் மாயமாகியுள்ள நிலையில் மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இந்த பேரிடரால் 3,461 பேர் வீடுகளை இழந்து முகாம்களில் தஞ்சம் புகுந்துள்ளனர். உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அந்நாட்டு அரசு 3 நாட்கள் தேசிய துக்கம் அறிவித்துள்ளது. மோசமான வானிலை மற்றும் சாலை துண்டிப்பால் மீட்புப் பணிகளில் பெரும் சவால்கள் நீடிக்கின்றன.