தேர்தல் வியூகம் அமைக்க அமித் ஷா வருகை வங்காளத்தில் அடுத்தடுத்த அதிரடி கூட்டங்கள்

தேர்தல் வியூகம் அமைக்க அமித் ஷா வருகை வங்காளத்தில் அடுத்தடுத்த அதிரடி கூட்டங்கள்

பிரதமர் மோடியின் வருகையைத் தொடர்ந்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா டிசம்பர் 29 மாலை கொல்கத்தா வருகிறார். அன்று இரவு சால்ட்லேக்கில் உள்ள பாஜக அலுவலகத்தில் கட்சியின் முக்கிய குழு மற்றும் தேர்தல் குழுவுடன் அவர் ஆலோசனை நடத்துகிறார். தேர்தலை எதிர்கொள்வதற்கான முக்கிய முடிவுகள் இந்த கூட்டத்தில் எடுக்கப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

டிசம்பர் 30 அன்று அவர் செய்தியாளர்களைச் சந்திப்பதுடன், ஆர்எஸ்எஸ் நிர்வாகிகளுடன் ஒருங்கிணைப்புக் கூட்டத்திலும் பங்கேற்கிறார். டிசம்பர் 31 அன்று இஸ்கான் கோயிலில் தரிசனம் செய்துவிட்டு, எம்எல்ஏ-க்கள் மற்றும் எம்பிக்களுடன் ஆலோசனை நடத்துகிறார். இறுதியாக சயின்ஸ் சிட்டியில் நடைபெறும் பாஜக மாநாட்டில் உரையாற்றிவிட்டு தனது பயணத்தை நிறைவு செய்கிறார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *