தேர்தலுக்கு முன்னதாக காங்கிரஸிற்கு பெரும் அதிர்ச்சி அளித்து பாஜகவில் இணைகிறார் பிரக்யா சதவ்
December 18, 2025

மறைந்த காங்கிரஸ் தலைவர் ராஜீவ் சதவின் மனைவியும் சட்ட மேலவை உறுப்பினருமான பிரக்யா சதவ் காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைய முடிவு செய்துள்ளார். கட்சியின் உள்விவகார மோதல்களால் அதிருப்தி அடைந்த அவர், வியாழக்கிழமை மாநிலத் தலைவர் ரவீந்திர சவான் முன்னிலையில் முறைப்படி பாஜகவில் இணையவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ராகுல் காந்தியின் நெருங்கிய நண்பராக இருந்த ராஜீவ் சதவின் மறைவுக்குப் பிறகு காங்கிரஸ் பிரக்யாவை இருமுறை மேலவை உறுப்பினராக்கியது. அவரது பதவிக்காலம் 2030 வரை இருந்தபோதிலும், தேர்தலுக்கு முன்னதாக அவர் கட்சி மாறுவது காங்கிரஸ் பேரியக்கத்திற்கு மிகப்பெரிய பின்னடைவாகக் கருதப்படுகிறது.