தென் கொரியாவிலிருந்து ஏவுகணை எதிர்ப்பு தாட் அமைப்பை அமெரிக்கா அகற்றுவதால் கிம் ஜாங் உன் தாக்குதல் நடத்தும் அபாயம் அதிகரிப்பு

மத்திய கிழக்கில் ஈரானின் அதிகரித்து வரும் தாக்குதல்களை முறியடிக்க தென் கொரியாவிலிருந்து நவீன ‘தாட்’ (THAAD) ஏவுகணை எதிர்ப்பு அமைப்பை பென்டகன் அகற்றி வருகிறது. சியோலில் உள்ள ரேடார் தளத்திலிருந்து இந்த பாதுகாப்பு அமைப்பின் பாகங்கள் லாரிகள் மூலம் கொண்டு செல்லப்படும் காட்சிகள் வெளியாகியுள்ளன. இஸ்ரேல் மற்றும் அண்டை பகுதிகளில் உள்ள அமெரிக்க தளங்கள் மீதான ஈரானிய ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களைத் தடுப்பதற்காகவே இந்த அவசர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ராணுவ வல்லுநர்கள் கருதுகின்றனர்.
இந்தச் சூழலால் தென் கொரியா கடும் கவலையில் உள்ளது. வான் பாதுகாப்பு கவசம் அகற்றப்படுவதால் வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் எல்லைப் பகுதிகளில் பெரிய அளவிலான ஊடுருவல் அல்லது தாக்குதல்களை நடத்தக்கூடும் என அஞ்சப்படுகிறது. கிம்மை எதிர்கொள்ள அமெரிக்கா மாற்று ஏற்பாடுகளைச் செய்யுமா என்பதில் இன்னும் தெளிவு இல்லை. இதனால் தென் கொரியாவின் பாதுகாப்பு தற்போது கேள்விக்குறியாகியுள்ளது.