துபாய் மற்றும் பஹ்ரைன் மீது ஈரான் நடத்திய ட்ரோன் தாக்குதலில் இந்தியர் காயம்

துபாய் மற்றும் பஹ்ரைன் மீது ஈரான் நடத்திய ட்ரோன் தாக்குதலில் இந்தியர் காயம்

மத்திய கிழக்கில் போர் பதற்றம் உச்சத்தை எட்டியுள்ள நிலையில் அமெரிக்காவின் எச்சரிக்கைக்கு பதிலடியாக துபாய் மற்றும் பஹ்ரைன் மீது ஈரான் கடுமையான ட்ரோன் தாக்குதல்களை நடத்தியுள்ளது. துபாய் விமான நிலையத்திற்கு அருகிலுள்ள பகுதிகளில் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் இந்தியர் ஒருவர் உட்பட நான்கு பேர் படுகாயமடைந்துள்ளனர். ஈரானின் வங்கிச் சேவைகள் மீதான தாக்குதலுக்குப் பழிவாங்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகத் தெரிகிறது.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் பொருளாதார மையங்களை இலக்கு வைத்து ஈரான் இந்த ஏவுகணைத் தாக்குதல்களை முன்னெடுத்துள்ளது. துபாய் மற்றும் பஹ்ரைனில் அடுத்தடுத்து நிகழ்ந்த வெடிச்சம்பவங்களால் அந்தப் பிராந்தியம் முழுவதும் பெரும் பீதி நிலவுகிறது. இந்த மோதல் ஒரு நீண்டகாலப் போராக உருவெடுக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *