துபாயில் மாயமான ராணுவ வீரர்: பிரதமர் மோடியின் உதவியை நாடும் நடிகை செலினா ஜெட்லி!

துபாயில் மாயமான ராணுவ வீரர்: பிரதமர் மோடியின் உதவியை நாடும் நடிகை செலினா ஜெட்லி!

கடந்த 18 மாதங்களாக ஐக்கிய அரபு அமீரகத்தில் சிறை வைக்கப்பட்டுள்ள தனது சகோதரர் மேஜர் (ஓய்வு) விக்ராந்த் ஜெட்லியை மீட்க பிரதமர் நரேந்திர மோடியின் தலையீட்டை நடிகை செலினா ஜெட்லி கோரியுள்ளார். 2024 செப்டம்பரில் மர்ம நபர்களால் கடத்தப்பட்ட விக்ராந்த், தற்போது அபுதாபியில் உள்ள அல்-வத்தா தடுப்புக்காவல் மையத்தில் இருப்பது தெரியவந்துள்ளது. எந்தவித முறையான வழக்கும் இன்றி அவர் சிறையில் வாடுவதாக செலினா வேதனை தெரிவித்துள்ளார்.

டெல்லி உயர்நீதிமன்றம் சமீபத்தில் விக்ராந்த் சார்பாக வெளிநாட்டு சட்ட நிறுவனம் வாதாட அனுமதி அளித்துள்ளது. வரும் பிப்ரவரி 10 அன்று அடுத்த விசாரணை நடைபெறவுள்ள நிலையில், இந்திய ராணுவத்திற்காகப் பணியாற்றிய ஒரு வீரரை மீட்க நாடு துணை நிற்க வேண்டும் என செலினா உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார். தனது சகோதரனை தாயகம் அழைத்து வரும் வரை தனது போராட்டம் ஓயாது என அவர் உறுதியளித்துள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *