திருமணமான 4 மாதத்தில் அதிர்ச்சி: கணவர் உயிரிழப்பு; மனைவியை கைது செய்த போலீஸ்!

திருமணமான 4 மாதத்தில் அதிர்ச்சி: கணவர் உயிரிழப்பு; மனைவியை கைது செய்த போலீஸ்!

ஈரோடு மாவட்டம் கிழக்கு திண்டல் பகுதியைச் சேர்ந்த 21 வயதான கட்டுமானத் தொழிலாளி மதன் குமார், அவரது உறவினரான 19 வயதான சுசித்ரா ஆகியோருக்கு நான்கு மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. காதல் திருமணம் செய்த இவர்கள், மதன் குமார் அடிக்கடி மதுபோதையில் வந்து மனைவியுடன் சண்டையிட்டார். அண்மையில், சுசித்ரா தாயின் வீட்டிற்கு செல்ல அனுமதி கேட்டபோது இருவருக்கும் இடையே சண்டை முற்றியது, இது கைகலப்பாக மாறியது.

சண்டையின்போது இருவரும் ஒருவரை ஒருவர் கழுத்தை நெரித்ததாக கூறப்படுகிறது. அப்போது சுசித்ரா தள்ளிவிடவே, மதன் குமார் கீழே விழுந்து மயக்கமடைந்து கிடந்தார். பயந்துபோன சுசித்ரா, கணவர் விஷம் குடித்ததாகக் கூறி அக்கம்பக்கத்தினர் உதவியுடன் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். கடந்த 11ஆம் தேதி சிகிச்சையில் இருந்த மதன் குமார் உயிரிழந்தார். பிரேதப் பரிசோதனை அறிக்கையில் கழுத்தை நெரித்தது மற்றும் தலையில் ஏற்பட்ட காயம் காரணமாக மூளையில் இரத்தம் உறைந்து அவர் இறந்ததாக தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, விசாரணையில் சுசித்ரா உண்மையை ஒப்புக்கொண்டதால், போலீசார் அவரைக் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *