திருமணத்திற்கு பின் முளைத்த தாடி மீசை மற்றும் கணவனின் விவாகரத்து தந்த புதிய வாழ்க்கை

திருமணத்திற்கு பின் முளைத்த தாடி மீசை மற்றும் கணவனின் விவாகரத்து தந்த புதிய வாழ்க்கை

செய்தி பிரிவு : பஞ்சாப்பைச் சேர்ந்த மன்தீப் கௌர் திருமணத்திற்குப் பிறகு தனது முகத்தில் தாடி மற்றும் மீசை வளரத் தொடங்கியதால் பெரும் அதிர்ச்சிக்குள்ளானார். இந்த உடல் மாற்றத்தை ஏற்க முடியாத அவரது கணவர் அவரை விவாகரத்து செய்ததால், மன்தீப் கடும் மன உளைச்சலுக்கு ஆளானார். பின்னர் ஆன்மீகத்தின் மூலம் தைரியம் பெற்ற அவர், தனது குறையைத் தனது அடையாளமாக மாற்றிக் கொள்ளத் தீர்மானித்தார்.

தற்போது மன்தீப் தலைப்பாகை அணிந்து இருசக்கர வாகனம் ஓட்டிக்கொண்டு மிகுந்த தன்னம்பிக்கையுடன் வாழ்ந்து வருகிறார். அவர் தனது முக முடிகளை அகற்றுவதை நிறுத்திவிட்டு, தனது சகோதரர்களுடன் விவசாயப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். சமூகத்தின் கேலிகளைப் பொருட்படுத்தாமல் சுயமாக வாழும் அவரது கதை பலருக்கு ஊக்கமளிப்பதாக அமைந்துள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *