திமுக கூட்டணியில் தமிழக நலனுக்காக தொகுதிகளை விட்டுக்கொடுக்க தயார் என்கிறார் துரை வைகோ

திமுக கூட்டணியில் தமிழக நலனுக்காக தொகுதிகளை விட்டுக்கொடுக்க தயார் என்கிறார் துரை வைகோ

திமுக கூட்டணியில் எந்தவித சிக்கலும் இல்லை என்றும், தொகுதி பங்கீட்டில் சுமூக முடிவு எட்டப்படும் என்றும் மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ எம்.பி தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற கட்சியின் அவசர உயர்நிலைக் குழு கூட்டத்திற்கு முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாஜகவை தமிழகத்திற்குள் நுழைய விடக்கூடாது என்ற பொதுவான நோக்கத்திற்காக மதிமுக சில தியாகங்களைச் செய்யத் தயாராக இருப்பதாகக் குறிப்பிட்டார்.

கூட்டணி வலிமையாக உள்ள நிலையில், கூடுதல் கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளின் எண்ணிக்கையை குறைக்க வேண்டிய சூழலை மதிமுக உணர்ந்துள்ளதாக அவர் கூறினார். தனிச் சின்னத்தில் போட்டியிடுவதா அல்லது உதயசூரியன் சின்னமா என்பது குறித்து உயர்நிலைக் குழு கூட்டத்தில் ஆலோசித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *