தாயின் கள்ளக்காதலை பார்த்த சிறுவன் படுகொலை, வாரணாசியில் நடந்த பயங்கரம்

உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் தனது தாயின் கள்ளக்காதலை நேரில் பார்த்த 10 வயது சிறுவன் சூரஜ், கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளான். தாய் சோனா சர்மா மற்றும் அவரது காதலர் ஃபைசான் ஆகியோரை தவறான நிலையில் சிறுவன் பார்த்ததே இந்த கொலைக்கு காரணமாகியுள்ளது. ரகசியம் வெளியே தெரிந்துவிடும் என்ற பயத்தில், ஃபைசான் அந்த சிறுவனை கழுத்தை நெரித்துக் கொன்று புதரில் வீசியுள்ளார்.
போலீசார் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் ஃபைசானை கைது செய்தனர். விசாரணையின் போது தப்ப முயன்ற அவர் மீது போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் காலில் காயம் ஏற்பட்டது. தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார். இந்த வழக்கில் சிறுவனின் தாய்க்கும் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் அவரிடமும் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.