தலையில் மூன்று அங்குல ஆணி, வாலிபரின் விபரீத செயலால் டாக்டர்கள் அதிர்ச்சி
February 4, 2026

செய்தி பிரிவு : போதை மற்றும் மன அழுத்தம் ஒரு மனிதனை எந்த அளவிற்கு கொண்டு செல்லும் என்பதற்கு இந்த சம்பவம் ஒரு எச்சரிக்கை. தனது தலையிலேயே மூன்று அங்குல ஆணியை சுத்தியலால் அடித்துக்கொண்ட வாலிபரின் செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்றைய காலக்கட்டத்தில் தனிமையும், தவறான பழக்கவழக்கங்களும் சாதாரண மனிதர்களின் உயிரை எப்படி ஊசலாட வைக்கிறது என்பதற்கு இதுவே சாட்சி.
அந்த ஆணி மண்டையோட்டைத் துளைத்து மூளைக்குள் சென்றதால் வாலிபரின் நிலைமை கவலைக்கிடமானது. கான்பூர் மருத்துவர்கள் மிகவும் சவாலான அறுவை சிகிச்சையை மேற்கொண்டு ஆணியை அகற்றி அவரது உயிரைக் காப்பாற்றினர். இத்தகைய நோயாளிகளுக்கு உடல் ரீதியான சிகிச்சையை விட, மீண்டும் இது போன்ற விபரீத முடிவுகளை எடுக்காமல் இருக்க முறையான மனநல ஆலோசனைகள் அவசியம் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.