தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார் திமுக அதிமுகவை அதிரவைக்கும் 4 முனை போட்டி

தமிழக சட்டமன்றத் தேர்தலில் முன்னெப்போதும் இல்லாத வகையில் திமுக, அதிமுக கூட்டணி, சீமான் மற்றும் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் என 4 முனைப் போட்டி உருவாகியுள்ளது. ஆளுங்கட்சியான திமுக தனது திட்டங்களை நம்பி களம் காணும் நிலையில், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக-பாஜக-பாமக மெகா கூட்டணி கடும் சவாலை அளிக்கிறது. இவர்களுக்கு இடையே சீமான் மற்றும் விஜய்யின் வருகை இளைஞர்களின் வாக்குகளைப் பிரித்து பாரம்பரிய அரசியல் கணக்குகளை மாற்றியமைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக விஜய் பெரம்பூர் தொகுதியில் போட்டியிடுவது தேர்தலை விஐபி களமாக மாற்றியுள்ளது. எந்தக் கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்காத சூழல் உருவானால், அது தமிழக அரசியலில் புதிய மாற்றத்திற்கு வழிவகுக்கும் என நிபுணர்கள் கருதுகின்றனர். மக்களின் இறுதித் தீர்ப்பு என்ன என்பது மே 4-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கைக்குப் பிறகே தெரியவரும். இந்த பரபரப்பான அரசியல் சூழலில், சிதறும் வாக்குகள் புதிய தலைமையைத் தீர்மானிக்கும் முக்கிய காரணியாக உருவெடுத்துள்ளன.