தமிழக வெற்றிக் கழகத்தின் இஃப்தார் விருந்தில் பங்கேற்கும் விஜய் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலானவர்களுக்கு மட்டுமே அனுமதி

தமிழக வெற்றிக் கழகத்தின் இஃப்தார் விருந்தில் பங்கேற்கும் விஜய் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலானவர்களுக்கு மட்டுமே அனுமதி

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் அவர்கள் இன்று மாலை மகாபலிபுரத்தில் நடைபெறும் புனித ரமலான் மாத இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். தேர்தல் ஆணையத்தின் உரிய அனுமதியுடன் மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை இந்த நிகழ்ச்சி நடைபெற உள்ளது. கட்சியின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த நிகழ்வு மத நல்லிணக்கத்தைப் போற்றும் வகையில் அமைய உள்ளது.

பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த நிகழ்ச்சியில் அழைப்பிதழ் உள்ள 1000 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அழைப்பிதழ் இல்லாதவர்கள் நேரில் வருவதைத் தவிர்த்து தொலைக்காட்சி நேரலையில் காணுமாறு அக்கட்சித் தலைமை கேட்டுக்கொண்டுள்ளது. திட்டமிடப்பட்ட நபர்களைத் தவிர மற்றவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதால் முழு ஒத்துழைப்பு வழங்குமாறு தொண்டர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *