தனது 11ஆம் வகுப்பு மாணவனுடன் மாயமான ஆசிரியை இறுதியில் போலீசாரிடம் சிக்கிய விசித்திர காதல்

ஹரியானா மாநிலம் பானிபட்டில் பள்ளி ஆசிரியை ஒருவர் தனது 11-ஆம் வகுப்பு மாணவனை அழைத்துக் கொண்டு மாயமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விவாகரத்து பெற்ற அந்த ஆசிரியை தனது பெற்றோருடன் வசித்து வந்த நிலையில் அந்த மாணவன் கடந்த இரண்டு ஆண்டுகளாக அவரிடம் டியூஷன் படித்து வந்துள்ளான். கடந்த மே 29 அன்று டியூஷன் சென்ற மாணவன் வீடு திரும்பாததால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போலீசார் தேடுதல் வேட்டையை தொடங்கினர்.
விசாரணையில் அந்த ஆசிரியை எந்த விலை உயர்ந்த பொருட்களையும் எடுத்துச் செல்லாமல் மாணவனுடன் தப்பிச் சென்றது தெரியவந்தது. தீவிர தேடுதலுக்குப் பிறகு போலீசார் இருவரையும் கண்டுபிடித்தனர். சிறுவனை கடத்தியதாக ஆசிரியை மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஆசிரியர் மற்றும் மாணவர் இடையேயான இந்த முறையற்ற காதல் விவகாரம் அப்பகுதியில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது.