டி20 உலகக் கோப்பையில் பங்கேற்பதை உறுதி செய்தது பாகிஸ்தான்

டி20 உலகக் கோப்பையில் பங்கேற்பதை உறுதி செய்தது பாகிஸ்தான்

டி20 உலகக் கோப்பையில் பங்கேற்பது குறித்த இழுபறிக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், தொடரில் விளையாடுவதை உறுதி செய்துள்ளது. பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் மற்றும் பிசிபி தலைவர் மோசின் நக்வி இடையிலான சந்திப்பிற்குப் பிறகு, எந்தப் போட்டியையும் புறக்கணிக்காமல் முழுமையாகப் பங்கேற்கப் போவதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது.

ஐசிசி எடுக்கவிருந்த கடுமையான ஒழுங்கு நடவடிக்கை காரணமாகவே பாகிஸ்தான் தனது பிடிவாதத்தை கைவிட்டதாகக் கருதப்படுகிறது. இதன் மூலம், பிப்ரவரி 15-ஆம் தேதி கொழும்பில் நடைபெறவுள்ள இந்தியா-பாகிஸ்தான் இடையிலான ஆட்டத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. பிப்ரவரி 7-ஆம் தேதி தொடங்கும் இந்த உலகக் கோப்பைத் தொடர் ஒரு மாதம் வரை நீடிக்க உள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *