டாக்காவில் இந்திய எதிர்ப்பு சதி? எல்லைகளில் ராணுவம் குவிப்பு மற்றும் போர் விமானங்களுக்கு அதிரடி உத்தரவு!
December 20, 2025
வங்கதேசத்தில் ‘ஜூலை வீரர்கள்’ என்ற பெயரில் நடக்கும் வன்முறைக்கு பின்னால் பாகிஸ்தான் மற்றும் துருக்கியின் சதி இருப்பதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது. தேர்தலை தடுத்து நிறுத்தி, டாக்காவில் இந்திய எதிர்ப்பு தீவிரவாத ஆட்சியை அமல்படுத்தவே இந்த திட்டமிடப்பட்ட கலவரங்கள் தூண்டிவிடப்படுகின்றன.
இதனைத் தொடர்ந்து, இந்திய எல்லைகளில் உச்சக்கட்ட பாதுகாப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சிலிகுரி காரிடார் பகுதிகளில் ரஃபேல் போர் விமானங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. ஊடுருவல் முயற்சிகளைத் தடுக்க எல்லைப் பாதுகாப்புப் படையினருக்குத் துப்பாக்கிச் சூடு நடத்த முழு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.