ஜப்பானின் நவீன வாழ்க்கைக்கு பின்னால் ஒளிந்திருக்கும் தனிமையின் கோர முகம்
March 11, 2026

தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்கும் ஜப்பானில் தற்போது தனிமை ஒரு மிகப்பெரிய சமூகப் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. இந்த விவகாரத்தைக் கையாள அந்நாட்டு அரசு தனி அமைச்சகத்தையே உருவாக்கியுள்ளது. கொரோனா காலத்திற்குப் பிறகு அதிகரித்துள்ள தற்கொலைகள் மற்றும் சமூக விலகல் போன்ற காரணங்களால் ஜப்பானிய அரசு தற்போது தீவிர கவலையில் உள்ளது.
குறிப்பாக இளைஞர்கள் பல ஆண்டுகள் தங்களைத் தாங்களே வீட்டுக்குள் முடக்கிக் கொள்ளும் ‘ஹிகிகோமோரி’ கலாச்சாரம் அங்கு அதிகரித்து வருகிறது. வேலைப்பளு மற்றும் தோல்வியால் ஏற்படும் சமூக அவமானம் இதற்கு முக்கியக் காரணமாகக் கருதப்படுகிறது. அத்துடன் முதியவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பும் பிறப்பு விகிதக் குறைவும் ஜப்பானின் எதிர்காலத்திற்கு ஒரு பெரும் சவாலாக மாறியுள்ளன.