செரிமானத்தை மேம்படுத்த ஆல்கலைன் வாட்டர் குடிக்கிறீர்களா அதனால் ஏற்படும் ஆபத்துகள் இதோ

ஆல்கலைன் வாட்டர் ஆரோக்கியத்திற்கு நல்லது என்று பரவலாக நம்பப்பட்டாலும் அதன் நன்மைகள் குறித்து இன்னும் முழுமையான ஆதாரங்கள் இல்லை. சாதாரண நீரை விட அதிக pH அளவு கொண்ட இந்த நீர் உடலின் அமிலத்தன்மையை தற்காலிகமாக குறைக்கலாம். இருப்பினும் நமது உடல் இயற்கையாகவே இரத்தத்தின் pH அளவை சீராக வைத்திருக்கும் திறன் கொண்டது என்பதால் இதனை அதிகப்படியாக உட்கொள்வது செரிமான கோளாறுகள் மற்றும் தசைப்பிடிப்பு போன்ற உபாதைகளை ஏற்படுத்தக்கூடும்.
குறிப்பாக சிறுநீரக நோய் உள்ளவர்கள் மற்றும் செரிமான அமிலம் குறைவாக இருப்பவர்கள் இந்த நீரை தவிர்ப்பது அவசியம். இதில் உள்ள அதிகப்படியான தாதுக்கள் சிறுநீரகத்தின் செயல்பாட்டை பாதிக்கலாம். மேலும் குழந்தைகள், முதியவர்கள் மற்றும் தொடர்ந்து மருந்து உட்கொள்பவர்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி ஆல்கலைன் வாட்டர் அருந்துவது ஆபத்தானது. இதனைத் தொடர்ந்து பயன்படுத்துவது உடலில் தாதுக்களின் சமநிலையை சீர்குலைத்து ஆரோக்கியத்திற்கு வேட்டு வைக்கக்கூடும்.