சென்னை எழும்பூர் ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு ரயில் சேவைகளில் அதிரடி மாற்றம்

எழும்பூர் ரயில் நிலையத்தின் 10 மற்றும் 11-வது பிளாட்பாரங்களில் நடைபெற்று வரும் சீரமைப்புப் பணிகள் காரணமாக முக்கிய ரயில் சேவைகளில் தெற்கு ரயில்வே மாற்றம் செய்துள்ளது. இதன்படி பொதிகை மற்றும் நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில்கள் மார்ச் 16 முதல் ஏப்ரல் 6 வரை எழும்பூருக்கு பதிலாக தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்படும். பயணிகள் தங்கள் பயணத்தை தாம்பரம் நிலையத்திலிருந்து திட்டமிடுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
மேலும் எழும்பூரிலிருந்து திருச்சி செல்லும் சோழன் சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ் வழக்கமான நேரத்திற்கு பதிலாக 2 மணி நேரம் 15 நிமிடங்கள் தாமதமாக காலை 10.15 மணிக்கு புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 5-ஆம் தேதி வரை அமலில் இருக்கும் இந்த தற்காலிக மாற்றங்களால் தென் மாவட்டங்களுக்குச் செல்லும் பயணிகள் ரயில் கால அட்டவணையை சரிபார்த்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.