சுப்மன் கில் அனைத்து வடிவ கிரிக்கெட்டிற்கும் கேப்டனாக தகுதியற்றவரா? மான்டி பனேசர் காட்டம்

சுப்மன் கில் அனைத்து வடிவ கிரிக்கெட்டிற்கும் கேப்டனாக தகுதியற்றவரா? மான்டி பனேசர் காட்டம்

இந்திய அணியின் இளம் நட்சத்திரம் சுப்மன் கில்லின் கேப்டன்சி திறன் குறித்து முன்னாள் இங்கிலாந்து வீரர் மான்டி பனேசர் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். கில்லிடம் திறமை இருந்தாலும், அவர் களத்தில் அலட்சியமாக விளையாடுவதாகவும், மிக விரைவில் திருப்தி அடைந்துவிடுவதாகவும் பனேசர் குற்றம் சாட்டியுள்ளார். விராட் கோலியிடம் இருந்த ஆக்ரோஷம் கில்லிடம் இல்லை என்றும், மூன்று வடிவ கிரிக்கெட்டிற்கும் தலைமை தாங்குவது அவருக்கு மிகப்பெரிய சுமையாக அமையும் என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும், இந்திய டெஸ்ட் அணியில் விராட் கோலியின் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது என்றும், அவரது இல்லாமை அணியின் வேகத்தை குறைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். பயிற்சியாளர் கௌதம் கம்பீர் டெஸ்ட் கிரிக்கெட்டில் இன்னும் கற்றுக்கொள்ள வேண்டியது அதிகம் இருப்பதாகக் கூறிய பனேசர், இன்றைய இளம் வீரர்கள் ரஞ்சி டிராபியை விட ஐபிஎல் ஒப்பந்தங்களுக்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் என்றும் சாடினார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *