சிலிண்டர் விலை உயர்வால் பெங்களூரில் 25 ஆயிரம் ஹோட்டல்கள் திடீர் மூடல்
March 10, 2026

வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை மற்றும் மின் கட்டண உயர்வை கண்டித்து பெங்களூரில் இன்று 25,000-க்கும் மேற்பட்ட ஹோட்டல்கள் அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன. கர்நாடக மாநில ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கத்தின் இந்த முடிவால் நகரின் முக்கிய உணவகங்கள் மூடப்பட்டுள்ளதால் பொதுமக்கள் மற்றும் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
சொத்து வரி உயர்வு மற்றும் கடும் குடிநீர் தட்டுப்பாடு காரணமாக உணவகங்களை நடத்துவதில் சிக்கல் நீடிப்பதாக உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த இக்கட்டான சூழல் குறித்து ஆலோசிக்க முதல்வர் சித்தராமையா இன்று மாலை சங்கப் பிரதிநிதிகளைச் சந்தித்துப் பேசவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.