சிறையில் ராஜ்பால் யாதவ்: ஓடோடி வந்த சல்மான், அஜய் தேவ்கன்! பாலிவுட்டில் நெகிழ்ச்சி

சிறையில் ராஜ்பால் யாதவ்: ஓடோடி வந்த சல்மான், அஜய் தேவ்கன்! பாலிவுட்டில் நெகிழ்ச்சி

கடன் விவகாரம் மற்றும் செக் மோசடி வழக்கில் தற்போது டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் பிரபல நகைச்சுவை நடிகர் ராஜ்பால் யாதவ். சிறைக்குச் செல்லும் முன்பாக, “பாலிவுட்டில் எனக்கு நண்பர்களே இல்லை” என அவர் ஆதங்கத்துடன் தெரிவித்திருந்த கருத்து திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ராஜ்பாலின் இந்த உருக்கமான பேச்சைக் கேட்டு பாலிவுட் நட்சத்திரங்கள் தற்போது அவருக்கு ஆதரவாகக் கரம் கோர்த்துள்ளனர். சல்மான் கான், அஜய் தேவ்கன் மற்றும் சோனு சூட் ஆகியோர் ராஜ்பாலுக்கு உதவ முன்வந்துள்ளனர். குறிப்பாக, நடிகர் சோனு சூட் தனது அடுத்த படத்தில் ராஜ்பாலுக்கு வாய்ப்பளிப்பதோடு, அதற்கான சம்பளத்தை முன்பணமாக வழங்கவும் ஒப்புக்கொண்டுள்ளார்.

ராஜ்பாலின் மேலாளர் கூறுகையில், சோனு சூட் தவிர டேவிட் தவான் மற்றும் வருண் தவான் ஆகியோரும் உதவி செய்வதாக உறுதியளித்துள்ளனர். மேலும், அரசியல் பிரமுகர் தேஜ் பிரதாப் யாதவ் 11 லட்ச ரூபாயும், இசை தயாரிப்பாளர் ராவ் இந்திரஜித் சிங் 1.11 கோடி ரூபாயும் நிதியுதவி அறிவித்துள்ளனர். 2010-ம் ஆண்டு படம் எடுப்பதற்காக வாங்கிய கடன் தொடர்பான இந்த வழக்கில், பிப்ரவரி இறுதியில் ராஜ்பால் யாதவ் விடுதலையாவார் என எதிர்பார்க்கப்படுகிறது.