சிட்னி தாக்குதலில் இந்தியத் தொடர்பு பின்னணியில் வெளியாகும் அதிர்ச்சித் தகவல்கள்

சிட்னி தாக்குதலில் இந்தியத் தொடர்பு பின்னணியில் வெளியாகும் அதிர்ச்சித் தகவல்கள்

ஆஸ்திரேலியாவின் பாண்டி பீச் பகுதியில் யூத சமூகத்தினர் மீது நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் புதிய திருப்பமாக இந்தியத் தொடர்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தாக்குதலில் தொடர்புடைய தந்தை மற்றும் மகன், நவீத் மற்றும் சாஜித் அக்ரம் ஆகியோர் இந்தியக் கடவுச்சீட்டைப் பயன்படுத்தி பிலிப்பைன்ஸ் சென்றது விசாரணையில் தெரியவந்துள்ளது. இவர்களது காரிலிருந்து ஐஎஸ்ஐஎஸ் கொடி மற்றும் வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

பிலிப்பைன்ஸ் பயணத்தின் போது இவர்கள் ஏதேனும் பயங்கரவாதக் குழுக்களுடன் தொடர்பு கொண்டார்களா எனப் புலனாய்வு அமைப்புகள் தீவிரமாக ஆராய்ந்து வருகின்றன. இதற்கிடையில், உயிரைப் பணயம் வைத்து தாக்குதலைத் தடுத்த வீரர் அகமது அல் அகமதுவை ஆஸ்திரேலியப் பிரதமர் நேரில் சந்தித்துப் பாராட்டினார். தற்போது இந்த வழக்கின் பின்னணி குறித்து சர்வதேச உளவு அமைப்புகளின் ஒத்துழைப்புடன் விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *