சிட்னி கடற்கரையில் ஐஎஸ்ஐஎஸ் பாணி தாக்குதல் பிலிப்பைன்ஸில் பயிற்சி பெற்ற தந்தை மகன்

சிட்னி கடற்கரையில் ஐஎஸ்ஐஎஸ் பாணி தாக்குதல் பிலிப்பைன்ஸில் பயிற்சி பெற்ற தந்தை மகன்

சிட்னியின் பாண்டி கடற்கரையில் நடந்த ஹனுக்கா கொண்டாட்டத்தின் போது தந்தை மற்றும் மகன் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் சிறுமி உட்பட 15 பேர் கொல்லப்பட்டனர். 50 வயதான சாஜித் அக்ரம் மற்றும் அவரது மகன் நவீத் அக்ரம் ஆகியோர் 103 ரவுண்டுகள் சுட்டு இந்த கொடூரத்தை அரங்கேற்றினர். தாக்குதலில் தந்தை கொல்லப்பட்ட நிலையில், மகன் காயங்களுடன் போலீஸ் காவலில் உள்ளார்.

இந்த தாக்குதல் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் சித்தாந்தத்தால் தூண்டப்பட்டது என்று பிரதமர் அந்தோணி அல்பானீஸ் உறுதிப்படுத்தியுள்ளார். இவர்கள் கடந்த மாதம் பிலிப்பைன்ஸில் ஆயுதப் பயிற்சி பெற்றதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. இவர்களிடமிருந்து ஐஎஸ்ஐஎஸ் கொடிகள் மற்றும் வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இந்த சம்பவம் ஆஸ்திரேலியாவின் பாதுகாப்பு மற்றும் துப்பாக்கி உரிம விதிகள் குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *