சிங்கப்பூரில் 4000 டாலர் சம்பளம் என ஆசை காட்டி 24 லட்சம் ரூபாய் மோசடி செய்த இளம்பெண் கைது

சிங்கப்பூரில் 4000 டாலர் சம்பளம் என ஆசை காட்டி 24 லட்சம் ரூபாய் மோசடி செய்த இளம்பெண் கைது

இன்ஸ்டாகிராம் தோழிகளுக்கு சிங்கப்பூரில் மாதம் 4000 டாலர் சம்பளத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி 24 லட்சம் ரூபாய் மோசடி செய்த ஐஸ்வர்யா என்ற இளம்பெண் சென்னையில் கைது செய்யப்பட்டார். தந்தையின் அறுவை சிகிச்சைக்குப் பணம் தேவை என முதலில் நாடகமாடிய இவர், பின்னர் போலி பணி நியமன ஆணைகளை வழங்கி தனது தோழிகளையே ஏமாற்றியது போலீஸ் விசாரணையில் அம்பலமானது.

பாதிக்கப்பட்ட சுஷ்மிதா அளித்த புகாரின் பேரில் தரமணி குற்றப்பிரிவு போலீசார் தலைமறைவாக இருந்த ஐஸ்வர்யாவைக் கைது செய்தனர். எம்.எஸ்சி பட்டதாரியான இவர் கோடம்பாக்கத்தில் உள்ள விடுதியில் தங்கி இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளார். இவரிடம் ஏமாந்த மற்ற நபர்கள் குறித்து போலீசார் தற்போது தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *