சிகிச்சை என்ற பெயரில் பணத்தை பறிக்கும் மருத்துவர்கள் மம்தா மோகன்தாஸ் பகீர் புகார்
February 14, 2026

புற்றுநோய் பாதிப்பிலிருந்து மீண்ட நடிகை மம்தா மோகன்தாஸ் இந்திய மருத்துவ முறையை கடுமையாக விமர்சித்துள்ளார். அமெரிக்காவில் நோயாளிகளின் மனநிலைக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் நிலையில், இந்தியாவில் மருத்துவர்கள் பணத்தையே குறிக்கோளாகக் கொண்டுள்ளதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
தமக்கு முறையான வழிகாட்டுதல் வழங்கப்படவில்லை என்று வருந்திய அவர், இம்யூனோதெரபி போன்ற சிகிச்சைகள் இந்தியாவில் பாமர மக்களுக்கு எட்டாக்கனியாக இருப்பதைச் சுட்டிக்காட்டினார். பல மருத்துவமனைகள் நோயாளிகளிடமிருந்து அதிக பணம் பறிப்பதிலேயே ஆர்வம் காட்டுவதாக அவர் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.