சபாநாயகரைச் சூழ்ந்த காங்கிரஸ் எம்.பி.க்கள்: நாடாளுமன்றத்தில் பரபரப்பு!

புது தில்லி: லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் காங்கிரஸ் எம்.பி.க்கள் நடந்துகொண்ட விதம், நாடாளுமன்றத்தின் மாண்பைக் குலைப்பதாக அமைந்துள்ளதாக மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு கடுமையாகச் சாடியுள்ளார்.
பிரியங்கா காந்தியின் முன்னிலையிலேயே சுமார் 20 முதல் 25 காங்கிரஸ் எம்.பி.க்கள் சபாநாயகரை அவமதிக்கும் வகையில் நடந்து கொண்டதாக ரிஜிஜு குற்றம் சாட்டியுள்ளார். “மக்களின் பிரதிநிதிகளே இத்தகைய ஒழுங்கீனமான செயல்களில் ஈடுபட்டால், ஜனநாயகத்தின் மீதான பொதுமக்களின் நம்பிக்கை என்னவாகும்?” என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், நாட்டின் பாதுகாப்பு விவகாரங்களில் அரசியல் செய்வது முறையல்ல என்றும் அவர் குறிப்பிட்டார். கல்வான் மோதல் மற்றும் முன்னாள் ராணுவத் தளபதியின் புத்தகம் தொடர்பாக ராகுல் காந்தி முன்வைத்த கருத்துக்களை விமர்சித்த ரிஜிஜு, பாதுகாப்புத் துறை சார்ந்த விவகாரங்களை அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்துவது தேசப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமையும் என எச்சரித்துள்ளார்.