சந்தேகத்தால் நேர்ந்த விபரீதம் காதலியின் தற்கொலைக்கு காரணமான காதலன் கைது

சந்தேகத்தால் நேர்ந்த விபரீதம் காதலியின் தற்கொலைக்கு காரணமான காதலன் கைது

சத்தீஸ்கர் மாநிலம் கோர்பா மாவட்டத்தில் ஒரு சிறுமி தற்கொலை செய்து கொண்ட வழக்கின் மர்மத்தை போலீசார் துலக்கியுள்ளனர். தனது காதலனின் தொடர்ச்சியான சித்திரவதை மற்றும் சந்தேகத்தால் மனமுடைந்த அந்த சிறுமி காட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். கடந்த நவம்பர் 27-ஆம் தேதி சந்தைக்குச் சென்று திரும்பிய சிறுமி, மறுநாள் அதிகாலை தனது அறையிலிருந்து காணாமல் போன நிலையில், பின்னர் சடலமாக மீட்கப்பட்டார்.

விசாரணையில் காதலன் தில்ராஜ் மார்கம் அந்த சிறுமியின் நடத்தையில் சந்தேகம் கொண்டு அடிக்கடி தகராறு செய்தது தெரியவந்தது. வேறொருவருடன் தொடர்பு இருப்பதாகக் கூறி அவர் கொடுத்த மன உளைச்சலே தற்கொலைக்குத் தூண்டியதாகக் கூறப்படுகிறது. கூடுதல் போலீஸ் சூப்பரண்டெண்டு நிதிஷ் தாக்கூர் கூறுகையில், குற்றம் சாட்டப்பட்ட வாலிபர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *