சஞ்சு சாம்சனின் பேட்டிங் வியூகத்தை பாராட்டித் தள்ளிய சச்சின் டெண்டுல்கர்

சஞ்சு சாம்சனின் பேட்டிங் வியூகத்தை பாராட்டித் தள்ளிய சச்சின் டெண்டுல்கர்

டி20 உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் நியூசிலாந்துக்கு எதிராக 89 ரன்கள் குவித்த சஞ்சு சாம்சனின் புத்திசாலித்தனமான ஆட்டத்தை கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் வெகுவாகப் பாராட்டியுள்ளார். யாரை அட்டாக் செய்ய வேண்டும், யாரிடம் நிதானம் காட்ட வேண்டும் என்ற சஞ்சுவின் முதிர்ச்சியான அணுகுமுறை இந்திய அணி 255 ரன்கள் எடுக்க முக்கிய காரணமாக அமைந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேட் ஹென்றி மற்றும் சான்ட்னரின் பந்துவீச்சை நிதானமாக எதிர்கொண்டு, மற்ற பவுலர்களை சிக்ஸர்களாக விளாசிய சஞ்சுவின் பேட்டிங் மிகவும் ‘ஸ்மார்ட்’ ஆக இருந்ததாக சச்சின் புகழாரம் சூட்டியுள்ளார். மேலும், இஷான் கிஷன் மற்றும் அபிஷேக் சர்மாவின் அதிரடி அரைசதங்களும் இந்திய அணியின் ஸ்கோரை உயர்த்த பெரிதும் உதவியது என அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *