சகோதரியின் பிரிவை வெற்றியாக மாற்றிய இஷான் கிஷன் இந்தியாவிற்கு உலகக்கோப்பை மகுடம்
March 9, 2026

அகமதாபாத்தில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணியை 96 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. சஞ்சு சாம்சன் மற்றும் அபிஷேக் சர்மா ஆகியோரின் அதிரடி ஆட்டத்தால் இந்திய அணி 20 ஓவர்களில் 255 ரன்கள் குவித்து வரலாற்று சாதனையை படைத்தது.
வெற்றிக்குப் பின் பேசிய இஷான் கிஷன், சமீபத்தில் கார் விபத்தில் உயிரிழந்த தனது சகோதரியின் நினைவாகவே இந்த போட்டியில் விளையாடியதாக உருக்கமாக தெரிவித்தார். சர்வதேச மகளிர் தினத்தில் கிடைத்த இந்த மகத்தான வெற்றியைத் தனது மறைந்த சகோதரிக்கு அவர் சமர்ப்பிப்பதாகக் கூறி அனைவரையும் நெகிழச் செய்தார்.